தேசியத் தலைவரை ஒருமையில் பேசிய காண்டீபன் - உள்நோக்கமல்ல என்கிறார்


அரச ஆதரவு தொலைக்காட்சி ஒன்றில் தேசிய தலைவரை ஒருமையில் அழைத்தமை மற்றும் பஸில் ராஜபக்சவுடனான நிதி விவகாரங்கள் தொடர்பில் முன்னணியின் பிரமுகர் காண்டீபன் தெரிவித்த கருத்துக்கள் கடும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில் அவரது உணர்வுபூர்வமான மறுப்பு வெளியாகியுள்ளது. 



அரச ஆதரவு தொலைக்காட்சி ஒன்றில் தேசிய தலைவரை ஒருமையில் அழைத்தமை மற்றும் பஸில் ராஜபக்சவுடனான நிதி விவகாரங்கள் தொடர்பில் முன்னணியின் பிரமுகர் காண்டீபன் தெரிவித்த கருத்துக்கள் கடும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில் அவரது உணர்வுபூர்வமான மறுப்பு வெளியாகியுள்ளது. ன் பிணத்தின் மீதேனும் ஈன அரசியலுக்கு இபமில்லை - நடராஜர் காண்டீபன் விளக்கம்
நான் அண்மையில் பங்குபற்றியிருந்த தொலைக்காட்சிக் கலந்துரையாடல் ஒன்றில் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும், நான் என் உயிரிலும் மேலாக நேசிக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மீதும் அவரது வழிநடத்தலில் விளைந்த ஆயுதப் போராட்டத்தின் மீதும் கொண்ட தீராத பற்றின் வெளிப்பாடே. நான் உதிர்த்த வார்த்தைகள் மூலம் என் ஆழ் மனதின் எங்கேனும் ஓர் மூலையிலாது துரோகத்தின் சாயல் துளிர்விடும ஆயின் விடுதலை வேள்வியில் ஆகுதி ஆகிய எங்கள் மறவர் தியாகங்கள் என்னை நிச்சயம் காவு கொள்ளட்டும். நான் என் இனத்துக்கு நேர்மையான உண்மையான அரசியலை செய்யவில்லை என்றால் என்னை ஆட்கொண்ட என் தலைவன் மரணத்தை எனக்கு பரிசளிக்கட்டும்.
என் தலைவன் வகுத்த இலட்சியப் பாதையில் தேச விடுதலைக் கனவுடன் பயணிக்கும் உங்கள் மனங்கள் நான் உதிர்த்த வார்த்தைகளால் காயப்பட்டிருந்தால் உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் ஆயிரம் தடவைகள் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன்.
ஆனால் என்னுடைய வார்த்தைகளுக்கு அர்த்தம் கற்பிப்பதற்கு முனையும் பிரகிருதிகளுக்கும் நிச்சயம் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என் பிணத்தின் மீதேனும் உங்கள் ஈன அரசியலுக்கு இடமில்லை.
என்றும் உங்கள்
நடராஜர் காண்டீபன்


No comments