கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு! 2 மாதங்களில் சோதனைகள் முடிந்துவிடும் என்கிறது ரஷ்யா!

ரஷ்யா கொரோனாவுக்கு சிகிற்சை அளிப்பதற்கான மருத்தைக் கண்டுபிடித்துள்ளது அறிவித்துள்ளது.


ரஷ்யாவில் உள்ள பாவிபிராவிர் மருந்து நிறுவனம், ஃபாவிபிராவிர் (favipiravir) என்ற பெயரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருந்தை கண்டு பிடித்துள்ளது.

வைரஸ் தடுப்பு மருந்தின் ஆரம்பகால மருத்துவ பரிசோதனைகள் புதிய கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் கொடுத்துள்ளன.

பரிசோதனைகளில் மாத்திரையை கொரோனா நோயாளிகள் எடுத்துக் கொண்டபோது ஐந்து நாட்களில் மீண்டும் பரிசோதனை நடத்தியபோது எதிர்மறையைக் காட்டியுள்ளது. கொரோனா வைரஸ் உடலுக்குள் பெருகும் திறணை இந்த மருத்து தடுக்கிறது.

இந்த மருத்துவ பரிசோதனைகள் 4 முதல் 8 வாரங்களுக்குள் முடிந்து விடும் என்றும் அதன் பின்னார் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என  ரஷிய சுகாதார அமைச்சகத்தின் கொரோனாஆராய்ச்சிக்கு பொறுப்பேற்றுள்ள மருத்துவ நிபுணர் டிமிட்ரி புஷ்கர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய விஞ்ஞானிகள் புதிய கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி முன்மாதிரிகளை சோதித்து வருகின்றனர், மேலும் சோதனை தடுப்பூசிகளின் மனித சோதனைகளை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

No comments