லெப்.கேணல் ராதா, பிரி.பால்ராஜ், லெப்.கேணல் வீரமணி மற்றும் சுரேஷ் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வு

லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12 ம் ஆண்டு,லெப். கேணல் வீரமணி மற்றும் தாயாக
பணியாளர் சுரேஷ்  ஆகியோருடைய  நினைவு வணக்க நிகழ்வானது பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இணையவழியில் இன்று (24-05-20) நடாத்தப்பட்டது .

திருமதி. நமசிவாயம் புஷ்பராணி அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து   பிரித்தானிய தேசியக் கொடியினை திரு.குகன் அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியினை குடாரப்பு தரையிறக்க சமரில், தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் அணியில் இணைந்து களமாடிய திரு. ஈசன் அவர்களும் ஏற்றி வைத்தார்கள்.

ஈகைச் சுடரினை    தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா அரசியல் துறையைச் சேர்ந்த திரு.செல்வா அவர்கள் ஏற்றி வைத்தார். அகவணக்கத்தை தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கான மலர் மலையினை திரு.நமசிவாயம் அணிவித்ததனை தொடர்ந்து பொதுமக்களும் மலர் வணக்கம் மற்றும் சுடர் வணக்கத்தினை அவரவர் வீடுகளில் இருந்தவாறே செலுத்தினார்கள் .

நிகழ்வில் எழுச்சி கவிதைகளை திரு.ஜெயக்குமார், திருமதி வாசுகி கிருஷ்ணகுமார் மற்றும் ஆங்கில கவிதையினை தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி.ஷானு ஆகியோர் வழங்கினார்கள் . ஆசிரியை திருமதி.சுகிதா ஆனந்த் அவர்களின் மாணவி மற்றும் ஆசிரியர் ஷர்மினி கண்ணன் அவர்களின் மாணவியினரின் எழுச்சி  நடனங்களும்  இடம்பெற்றன. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மகளிர் அமைப்பை சேர்ந்த செல்வி.சாமினி ராஜநாதன் அவர்களின் உரை,  பிரிகேடியர் பால்ராஜ் உடனான அனுபவ பகிர்வினை தமிழீழ வைத்திய கலாநிதி திரு.தர்மதுரை தணிகை மற்றும் கேணல் ராதா அவர்களுடனான அனுபவ பகிர்வினை திரு.ஷாஜகான் ஆகியோரும் வழங்கினார்கள் .

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்  என்கின்ற பாடலை தொடர்ந்து தேசிய கொடிகள் கையேந்தப்பட்டன. தொடர்ந்து தமிழீழம் நோக்கிய பயணம் தொடரும் என்கின்ற உறுதிமொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.

No comments