இலங்கையில் இரண்டாம் அலை:தடுக்க கடும் பிரயத்தனம்?


தேர்தல் ஜூன் 20 நடத்தப்படும் நிலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டால் இரண்டாவது அலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக சமூதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் மீண்டும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையிலும் நோய் பரவத் தொடங்கினால் கொரோனா பரவிய நாடுகளில் எல்லாம் நோயாளர்களுக்கு அடுத்த படியாக வைத்தியர்களே அதிகளவில் பாதிக்கப்படக் கூடிய அபாயத்தில் இருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ள நிலையில் இலங்கை அரசு நாளைய ஊரடங்கு திறப்பினை முன்னிட்டு அவசர அவசர அறிவிப்புக்களை விடுத்துவருகின்றது. 

இன்னும் இரண்டு வாரங்களுக்கு பொது பயணிகள் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டாம் என்று பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் இலங்கை போக்குவரத்து அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை திறக்கப்படவுள்ள முடிதிருத்தகங்களிற்கு நான்னு பக்கங்களில் புதிய சுற்றுநிரூபத்தை அவசர அவசரமாக அரசு தற்போது விடுத்துள்ளது.


No comments