இன்னும் இருவாரம் பொது போக்குவரத்தில்லை?


நாளை திங்கட்கிழமை முதல் கொழும்பு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு விலக்கப்படுகின்ற போதும் எதிர்வரும் இரு
வாரங்களிற்கு பொது பயணிகள் போக்குவரத்து இடம்பெறாதென தெரியவந்துள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு பொது பயணிகள் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டாம் என்று பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் இலங்கை போக்குவரத்து அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம் வெளியிலிருந்து பொதுமக்கள் கொழும்பு உள்ளிட்ட அபாயமிக்க நான்கு மாவட்டங்களிற்கு வருவதை மேலும் இருவாரங்களிற்கு மட்டுப்படுத்த அரசு மும்முரமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments