ஒரு இலட்சம்:ஆமாம் ஒரு இலட்சமாம்?

கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் தேவைகளிற்காக உருவாக்கப்படவில்லையென அக்கட்சியில் இடையில் இணைந்து கொண்ட
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் தான் எதிர்வரும் தேர்தலில் ஒரு இலட்சத்திற்கும் குறையாத வாக்குகளை பெறுவேன் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

 பாதுகாப்பாக தனது கொழும்பு வீட்டில் தங்கியுள்ள எம்.ஏ.சுமந்திரன் ஒரு சில நீதிமன்ற அமர்வுகளில் பங்கெடுப்பது மற்றும் அரச உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபடுவதென மும்முரமாக இருப்பது தெரிந்ததே. கடந்த தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் வெற்றி பெற்ற போது யாழில் தங்கியிருந்த உதவி தேர்தல் ஆணையாளர் முகமட் தற்போது ஓய்வு பெற்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

No comments