அமெரிக்காவில் முடக்க நிலையை மீறி பரவும் போராட்டங்கள்!

Minnesota
அமெரிக்காவில் 30 நகரங்களில் பரவியுள்ள போராட்டம்

அமெரிக்கரிவில் முடக்க நிலையை மீறி மக்கள் வீதி வீதியாக இறங்கிப் போராட்டத்தை நடத்துகின்றனர். போராட்டமானது இனவெறி மற்றும் காவல்துறையினரின் மிருகத்தனமான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

கடந்த திங்கட்கிழமை மினசோட்டாவில் வெள்ளையினத்தவரான காவல்துறையினர் ஒருவர் கறுப்பினத்தரை நிலத்தில் வீழ்த்தி கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியத்தில் அவர் மூச்சு விட முடியாலம் இறந்தார். கறுப்பினத்தரவான ஜார்ஜ் ஃபிலாய்ட் தன்னால் மூச்சு விடமுடியால் இருக்கிறது பலமுறை கூறியும் காவல்துறையைச் சேர்ந்தவர் செவிசாய்க்வில்லை. இதனால் அவர் இறக்க நோிட்டது. 
Minnesota

ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அமொிக்காவின் பல நகரங்களிலு் போராட்டங்கள் பரவின.

பல ஆண்டுகளாக கறுப்பின மக்கள் காவல்துறையினரின் கைகளில் இறப்பதாக சீற்றடைந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

எதிர்பாளர்கள் "பிளாக் லைவ்ஸ் மேட்டர்" என்ற பதாதைகளைத் தாங்கியவாறு "என்னால் மூச்சு விட முடியவில்லை" என அவர் கடைசியாக கூறிய வார்த்தைகளைக் கூறி கோசங்ககளை எழுப்பினர்.

இதேநேரம் ஆத்திரமடைந்த மக்கள் மகிழுந்துகளை எரித்தும், கடைகளைச் சூறையாடியும், கட்டிடங்களுக்கு தீ வைத்தும் வன்முறைகள் அரங்கேறியுள்ளன.

காவல்துறையினரும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக் காரர்களை கலைக்க முற்பட்டனர். 

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி டிரம்பின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, மிகவும் கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஆனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை எனவும், அவர்கள் மிக சாமர்த்தியமாக ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டதாகவும் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

No comments