அம்பலமாகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்?


கோத்தபாய அரசினது எடுபிடி அமைப்பாக செயற்படும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளை சமுதாய மருத்துவ வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் மீண்டும் அம்பலமாக்கியுள்ளார்.

தமது முறைகேடுகளை அம்பலமாக்கியதற்கு பழிவாங்கலாக முரளி வல்லிபுரநாதனை  யாழிலிருந்து கொழும்பிற்கு திருப்பி அழைக்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முற்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று கருத்து வெளியிட்டுள்ள முரளி வல்லிபுரநாதன் "கொரோனா நோயாளர்களுக்கு மலேரியா மருந்தை உரிய ஆய்வு முறைகளின்றி அமெரிக்க மருந்து ஆய்வு நிறுவனத்தின் (FDA ) அனுமதியும் இன்றி பயன்படுத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். 
அதே போல இலங்கையில் துறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெறாது இந்த மருந்தை பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் (GMOA) சங்கம் சுகாதார அமைச்சை அழுத்தத்துக்கு உள்ளாக்கி இருந்தது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட பக்கவிளைவுகளை தொடர்ந்து மலேரியா மருந்தை கொரோனா நோயாளர்களுக்கு பயன்படுத்தவேண்டாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது. இதன் மூலமாக பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இன்னொரு செயல் அம்பலத்துக்கு வந்திருக்கிறது".

No comments