லிபரேசன் ஒப்பிறேசன்! அல்வாய் முத்துமாரி அம்மன் படுகொலை நினைவேந்தல்!

இலங்கை படைகளால் நடத்தப்பட்ட எறிகணை குண்டு வீச்சில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட 33 வது ஆண்டு நினைவேந்தல் நேற்று அல்வாய் முத்துமாரி அம்மன் கோவில் முன்றலில் நினைவு கூரப்பட்டுள்ளது. 
ஆரச படைகளால் முன்னெடுக்கப்பட்ட ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கை மூலம் 1987ம் ஆண்டில் நடத்தப்பட்ட கொலை வெறியாட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

வடமராட்சி மண்ணினை கைப்பற்றும் நோக்கில் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல் நடவடிக்கையின் போது மக்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்டிருந்தனர்.

இத் தாக்குதல் காலத்தில் மக்களை, பொது இடங்களுக்குச் சென்று அமருமாறு வானொலி மூலம் அறிவித்தது அரசு. அதனை நம்பிய அப்பாவிப் பொது மக்கள் அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்தனர்.

அவ்வாறு தஞ்சமடைந்த மக்கள் மீது, சிறிலங்காப் படைகள் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டதுடன், உலங்கு வானூர்தி மூலமான வான் தாக்குதலையும் மேற்கொண்டனர்.

உயிர்த் தஞ்சம் புகுந்த ஏதுமறியா அப்பாவிகளை கொன்று குவித்தது சிங்களம், 
ஒபரேஷன் லிபரேஷன் 1987 அல்வாய் முத்துமாரி அம்மன் படுகொலை நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் தமிழ் கொடி அமைப்பினர் நடாத்தினார்கள்.

இந்த நிகழ்வில் பயன்தரு மரக் கண்டுகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

'ஒப்பிரேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கையை அடுத்து பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த வடமராசி மக்கள் பெருமளவில் தஞ்சமடைந்திருந்த அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு பலர் காயமடைந்திருந்தார்கள்.

சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்ட நிலையில் உரிமை கோரப்படாத பதின்மூன்று உடலங்கள் உள்ளிட்ட சிதைவடைந்து உருக்குலைந்து போயிருந்த பலரது உடல் சிதைவுகளையும் ஓரிடத்தில் போட்டு ஆலய நிர்வாகத்தினரால் எரியூட்டப்பட்டிருந்தது.

1987ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி தொடக்கம், 31ஆம் திகதி வரை இராணுவம் படை நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, 1987ஆம் ஆண்டு மே மாதம் 29, 30, 31ஆம் திகதிகளில் வடமராட்சி, அல்வாய், மாலு சந்தி, திக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இராணுவம் மேற்கொண்ட ஷெல் வீச்சுத் தாக்குதலில் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments