28000 இறப்புக்கள்! ஒரேநாளில் 27000 தொற்று! நெருக்கடியில் பிரேசில்;

பிரேசிலில் கொரோனா தொற்றினால் பலியானோரின் எண்ணிக்கை, ஸ்பெயினில் மாண்டவர்களின் எண்ணிக்கையை மிஞ்சிவிட்டது.
இதுவரையில் பிரேசிலில் 28,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியாகியுள்ளனர்.உலக அளவில் ஐந்தாவது ஆக அதிகமான எண்ணிக்கையாக உள்ளது.
மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில், அங்கே ஒரே நாளில், 27,000 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது அந்நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
அந்நாட்டில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 465,000 உயர்ந்துள்ளது.
ஆனால் உண்மையில் அந்த எண்ணிக்கை, 15 மடங்கு அதிகமாக இருக்கக்கூடுமென நிபுணர்கள் நம்புகின்றனர்.

No comments