உலக நாடுகளில் கொரோனா பலி இரு இலட்சம் நெருங்கியது

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, ஸ்பைன் மற்றும் பிரான்ஸ் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று (18) காலை வரை 210 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 154,266 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த கொரோனா தாக்கம் காரணமாக இதுவரை 2,250,790 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்ளில் 571,147 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வரை 1,525,377 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்கை சந்தித்த நாடுகளாக,

- அமெரிக்கா > 37,158
- இத்தாலி > 22,745
- ஸ்பெயின் > 20,002
- பிரான்ஸ் > 18,681
- பிரித்தானியா > 14,576
- பெல்ஜியம் > 5,163
- ஈரான் > 4,958
- சீனா > 4,632

காணப்படுகின்றன.

No comments