கவலைக்குரிய நேரத்தில் சண்டைகள் வேண்டாம், ஒற்றுமையாக செயல்படுங்கள்;

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு சபை ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின்  தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய Covid-19 கிருமிப் பரவல் குறித்து, காணொளி வழியாக முதன்முறையாக, ஐக்கிய நாடுகள் சபையின்  கூட்டம் நடத்தப்பட்டது.
பாதுகாப்பு மன்றத்தின் பதினைந்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர்.
கூட்டம் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டாலும், அதில் திரு. குட்டரஸ் பகிர்ந்துகொண்ட கருத்துகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கிருமிப் பரவல் "ஒரு தலைமுறைக்கான போராட்டம்" என்று திரு. குட்டரஸ் வர்ணித்தார்.
கவலைக்குரிய இந்த நேரத்தில் பாதுகாப்பு மன்றம் ஒற்றுமையாகச் செயல்பட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது முக்கியம் என்றார் அவர்.  

No comments