வடக்கில் ஊரடங்கை தளர்த்த ஆளுநர் சிபார்சு?
யாழ்.குடாநாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்கின்ற நிலையில் சில பகுதிகளில் புது வருடத்துடன் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக ஆராயப்பட்டுவருகின்றது.
இது தொடர்பில் வடக்கு ஆளுநர் இலங்கை ஜனாதிபதிக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென்மராட்சி , தீவகம் மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண நிலவரம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக வடமாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தக் கூடிய இடங்கள் மொடர்பில் படையினர் மற்றும் சுகாதார அமைச்சு என்பன ஊர் பெயர் விபரங்களை சமர்ப்பித்தனர். இதில் வடமராட்சியின் விபரத்தை கோரியபோது வடமராட்சியின் ஊரடங்கை தளர்த்த படைத்தரப்போ அல்லது சுகாதார அமைச்சோ இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையிலேயே தென்மராட்சி , வடமராட்சி கிழக்கு ( மருதங்கேணி ) ஆகியவற்றுடன் தீவகத்தின் ஊரடங்கினையும் தளர்த்த முடியும் எனவும் இருப்பினும் அவை அந்த பிரதேசத்துள் மட்டுமே நடமாட முடியும் எனவும் தடை செய்யப்பட்ட பிரதேசங்களிற்குள் நுழைய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏனைய பகுதிகள் தொடர்பில் அடுத்த வார இறுதியில் தாவடி , அரியாலை , மானிப்பாய் போன்ற தனிமைப்படுத்தல் பிரதேசங்களின் நிலவரத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டதோடு கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, முல்லைத்தீவின் துணுக்காய் , பாண்டியன்குளம் ஆகியவற்றுடன் ஓட்டுசுட்டானின் ஒருபகுதி , வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி , செட்டிகுளம் ஆகிய இடங்களின் ஊரடங்கினையும் புதுவருடத்துடன் நீக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தொடர்பில் தாராபுரம் தொடர்பான ஆய்வின் பின்னர் விபரத்தை தெரிவிப்பதாகவும. தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment