வடக்கிலிருந்து விடுமுறையில் சென்றால் தனிமைப்படுத்தல்?


வெலிசறை கடற்படை முகாமில் ஏற்பட்ட கொரோனா தொற்றினை தொடர்ந்து வடக்கில் நிலைகொண்டுள்ள முப்படைகள் மற்றும் காவல்துறையினரது நடமாட்டம் பற்றி கேள்வி எழுந்துள்ளது.

விடுமுறையில் தென்னிலங்கை சென்றுவரும் முப்படைகளினை சேர்ந்தவர்களால் கொரோனா பரவலாமென மருத்துவதுறை எச்சரித்துள்ளது.

இதனிடையே இலங்கை முழுவதும் பொலிஸாருக்கு வரும் 30 வரை விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் அவசர தேவைக்கு உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று செல்கின்றனர் அதுவும் கொரோனா பகுதியில் வீடு என்றால் அனுமதி கிடைக்காது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விடுமுறையில் சென்று வரும் அனைவருக்கும் 14 நாட்கள் தாம் கடமையாற்றும் பொலிஸ் நிலையத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தனிமைப்படுத்தல் இடம்பெறும் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.அவ்வாறு தனிமைபடுத்தலை அலட்சியம் செய்த ஊர்காவல்துறை பொலிஸ் அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் வேலையால் இடைநிறுத்தபட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று முப்படைகளை சேர்ந்த பாதுகாப்பு தரப்பும் விடுமுறையில் தென்னிலங்கைக்கு சென்று வந்தால் கட்டாய தனிமை படுத்தல் உள்ளாக்கப்பட வேண்டுமென மருத்துவ துறை வலியுறுத்த தொடங்கியுள்ளது.

No comments