வவுனியா சிவபுரம் வீதியில் ஆணின் சடலம் ?


வவுனியா சிவபுரம் வீதியில் நீர் வியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மன்னார் வீதியில் இருந்து சிவபுரம் செல்லும் பாதையில் நீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் துவிச்சக்கரவண்டியுடன் ஒருவரின் சடலம் காணப்படுகின்றமை தொடர்பில் இன்று காலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழியில் மழை நீர் தேங்கி நிற்பதுடன் பாதுகாப்பற்ற குழி என்ற சமிக்ஞைகளும் காணப்பட்டவில்லை.
இக்குழியிலேயே அவ்வீதியால் சென்ற ஒருவர் வீழ்ந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குழியில் சடலமாக காணப்படுபவர் 4 ஆம் கட்டை கற்பகபுரத்தை சேர்ந்த ஜெயராசா குலேந்திரன் எனவும் அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

No comments