கொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்?


புலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னி பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் என்பவரே லண்டனில் இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றிற்கு எதிராக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்பு மிக்க பணியினை ஆற்றிவருகின்றனர்.

இந்நிலையில் புலம்பெயர் தேசத்தில் தமிழ் ஊடகவியலாளரது மரணம் கடும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

No comments