இலங்கையில் கொரோனா சாவு 7 ஆக உயரவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மற்றும் ஒருவர் உயிரிழந்தார்.

ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்றுவந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கல்கிஸை பிரதேசத்தை சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் அண்மையில் ஜேர்மனிக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர் எனத் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

No comments