மே;தேர்தல் பணிக்கு கோத்தா உத்தரவு?


நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றின் ஆலோசணையை பெறுவது தேவை அற்றது எனவே தேர்தல் பணிக்குத் தயாராகுங்கள் என தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபாய ராயபக்சா கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆணைக்குழு கடந்தமாதம் 30ம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடுத்த்துற்கு பதிலளித்து அனுப்பி வைத்த கடித்த்திலேயே மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜெயசுந்தரவினால் ஒப்பமிட்டு 6ம் திகதி அனுப்பி வைத்த கடித்த்தில் மேலும் குறிப்பிடுகையில் ,
அரசியல் அமைப்பின் 129 ஆம. சரத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்திற்கமை நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 24-3ன் பிரகாரம் தேர்தலை 14 நாற்களிற்கு குறையாமல் ஒத்தி வைக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு உள்ளது. அதேநேரம் 15ஆம் நாளில் இருந்து தேர்தலை நடாத்தும் அதுகாரமும் உண்டு.
இதேநேரம் நாளுமன்றத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றினை நாடவேண்டிய அவசியம் இல்லை என்றே ஆலோசணை வழங்கப்படுவதோடு தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உரிய அதிகாரம் மற்றும் சட்ட ஏற்பாட்டில் நான் தலையிட விரும்பவில்லை. எனப் பதிலளித்துள்ளார 

No comments