என்னை மிரட்ட முடியாது?


தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் கோத்தா அழுத்தங்களை பிரயோகிதத்தான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் மிரட்டி தன்னை பணிய வைக்க முடியாடிதென மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொது தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளதாக  ஆணைக்குழுவின் தவிசாளர் மஹந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
“ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலை விரைவாக நடத்துமாறு அல்லது ஒத்திவைக்குகமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு யாராலும் அழுத்தம் கொடுப்ப முடியாது என்றும், தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எப்போது தேர்தல் நடக்குமென எல்லோரும் என்னிடம் கேட்கின்றனர். தனி ஒருவனாக அதற்கு என்னால் பதில் அளிக்க முடியாது.
ஒரு பொதுவான முடிவுக்கு ஆணைக்குழு வர வேண்டும். அதற்கு முன் சுகாதார, பாதுகாப்பு தரப்புக்களுடன் பேச வேண்டும். பின்னரே  ஏகமனதான தீர்மானமொன்றுக்கு வரவேண்டும்.
1983 ஆம் ஆண்டிலிருந்து நான் அரச சேவையில் இருக்கிறேன். இதுவரை எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது குழுவுக்கோ சார்பாக நான் செயற்பட்டது இல்லை. இனிமேலும் செயற்படமாட்டேன்.
அரசியலமைப்பு, ஜனநாயகம், மக்களுக்கு சார்பாகவே நான் இருக்கிறேன். கொவிட் 19க்கு தோல்வி ஜனநாயகத்துக்க வெற்றி” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments