கல்லுண்டாய்கு வந்த மலக்கழிவை மடக்கிய மக்கள்
மல்லாகம் நீதிமன்றின் உத்தரவை மீறி மலக் கழிவுகளை ஏற்றி வந்து கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு முயற்சித்த தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனம் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று (26) மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் - பொன்னாலை வீதி கல்லுண்டாய் வெளியில் இடம்பெற்றது.
நவாலி மக்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு கல்லுண்டாயில் மலக் கழிவுகளைக் கொட்டுவதற்கு தடை விதித்து மல்லாகம் நீதிமன்றம் 2018ம் ஆண்டில் கட்டளை வழங்கியிருந்தது.
அக்கட்டளையை மீறி தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கல்லுண்டாய் பகுதியில் மலக் கழிவுகளை கொட்டி வந்தன.
இந்நிலையில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகருடன் கல்லுண்டாய் பகுதிக்குச் சென்ற மக்கள், அங்கு தனியார் நிறுவனம் ஒன்று பவுசரில் ஏற்றி வந்த மலக் கழிவுகளை கொட்டுவதற்கு முயற்சித்ந வேளை தடுத்து நிறுத்தியதுடன், அந்த பவுசரை தடுத்து வைத்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
Post a Comment