பயங்கரவாதிகளை விட மாட்டேன் - கோத்தா

தீவிரவாத வன்முறைக்கு ஒருபோதும் இடமளியோம் என்று ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் 1ம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அதில் மேலும்,

இகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் உயிரிழந்தவர்களினதும் கடுமையாக காயப்பட்டவர்களினதும் குடும்ப உறுப்பினர்களுக்கும், அதனால் பெரிதும் கவலைக்குள்ளான கத்தோலிக்க மக்களுக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் நான் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தாக்குதலில் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க சமயத்தவர்கள் என்ற போதும் அது அவர்களை மட்டுமன்றி முழு இலங்கை மக்களையும் இலக்கு வைத்த பயங்கரவாத நடவடிக்கையாகும். எந்த சிந்தனையின் பெயரில் இந்த மனிதப் படுகொலை இடம்பெற்றாலும் இது மனித இனத்திற்கே இழுக்கான ஒன்றாகும்.

தேசிய பாதுகாப்பை மறந்து பாதுகாப்பு திட்டங்களும் ஏற்பாடுகளும் கைவிடப்பட்டிருந்த காரணத்தினாலேயே உயிர்த்த ஞாயிறு மனிதப் படுகொலைக்கு வசதியான பின்னணி உருவானது. அத்தகையதொரு கட்டற்ற சூழலில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்குவது ஆச்சரியமான ஒன்றல்ல.

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற எனது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து இனங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், எந்தவகையிலும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாத வன்முறைக்கும் இடமளிக்கப்போவதில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை சரியாக இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நான் எனது மக்களுக்கு உறுதியளிக்கின்றேன். - என்றார்.

No comments