புலிகளுக்கு பதறாத அரசுக்கு கொரோனா பயமா? பிதற்றுகிறார் மஜீத்

நாட்டில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ யுத்த‌ம் நில‌விய‌ கால‌த்திலும் தேர்த‌லில் போட்டியிட்ட‌ ப‌ல‌ வேட்பாள‌ர்க‌ள் குண்டு தாக்குத‌ல்க‌ளில் கொல்ல‌ப்ப‌ட்ட‌ போதும் நாட்டில் தேர்த‌ல் ஒத்தி வைக்க‌ப்ப‌ட்ட‌தில்லை என்ப‌தால் கொரோனா அனர்த்தத்திற்காக ‌தேர்த‌லை தொட‌ர்ந்தும் ஒத்தி வைக்காம‌ல் ஜூன் 20ல் அர‌சு தேர்த‌லை ந‌ட‌த்த‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

அம்பாறையில் வைத்து இதனை நேற்று தெரிவித்தார்.

அத்துடன் 88ம் ஆண்டு வ‌ட‌க்கு கிழ‌க்கு மாகாண‌ ச‌பை தேர்த‌லின் போட்டியிடுவோரை சுடுவோம் என‌ புலிக‌ள் அச்சுறுத்தி; அவ்வாறு போட்டியிட்ட‌ சில‌ர் சுட‌ப்ப‌ட்டும் முஸ்லிம் காங்கிர‌ஸ் அத்தேர்த‌லில் போட்டியிட்ட‌து.

இப்போது கொரோனாவுக்கு ப‌ய‌ந்து முஸ்லிம் காங்கிர‌ஸ் தேர்த‌லை ஒத்தி போட‌ச் சொல்வ‌து அத‌ன் கோழைத்த‌ன‌த்தை காட்டுகிற‌து.

தேர்த‌ல் பொதுக்கூட்ட‌த்தில் ல‌லித் அத்துல‌த்முத‌லி போன்றோர் குண்டு வைத்து கொல்ல‌ப்ப‌ட்ட‌ போதும், ச‌ந்திரிக்கா குண்ட‌டி ப‌ட்டு ஒரு க‌ண்ணை இழ‌ந்த‌ போதும் தேர்த‌ல்க‌ள் ஒத்தி வைக்க‌ப்ப‌ட‌வில்லை.

கொரோனாவால் வேட்பாளர்கள் எவரும் பலியாகவில்லை. எனவே பொதுக் கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்துவ‌தை த‌டை செய்து, மாவ‌ட்ட‌த்துக்கு மாவ‌ட்ட‌ம் வேட்பாள‌ர்க‌ளோ, த‌லைவ‌ர்க‌ளோ செல்வ‌தை த‌டை செய்து, ச‌மூக‌ இடைவெளி விட்டு தேர்த‌லை குறிப்பிட்ட‌ திக‌தியில் ந‌ட‌த்தும் ப‌டி உல‌மா க‌ட்சி அர‌சை கேட்டுக்கொள்கிற‌து என கூறினார்.

கடும் சர்ச்சைக்குரிய நபராக கருதப்படும் இனவாதப் போக்குடைய அப்துல் மஜீத்தின் இந்த கருத்து வேடிக்கையுடன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments