சமூக இடைவெளி:சுகாதார திணைக்களத்துடன் சிவன் அறக்கட்டளையும் இணைவு!


யாழ்.குடாநாட்டினில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரங்களில் மக்களிடையே சமூக இடைவெளியினை பேணுவது பற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாதேயிருந்து வருகின்றது.

சமூக இடைவெளியை பேணுமாறு சுகாதார துறையினர் நாள் தோறும் ஊடகங்கள் வாயிலாக கத்தி தீர்த்தாலும் அதில் முன்னேற்றம் ஏற்பட்டபாடாக இல்லை.

மீண்டும் கொரோனா பரம்பல் ஏனைய மாவட்டங்களில் முனைப்படைந்துள்ள நிலையில் வடமாகாண சுகாதார திணைக்கள் சிவன் அறக்கட்டளை அமைப்புடன் இணைந்து மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் குதித்துள்ளது.

சுவரொட்டிகள்,துண்டுபிரசுரங்கள்,வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்ரிக்கர் பதாகைகள் என சுகாதார திணைக்களம் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.

இதற்கான நிதி அனுசரணையினை கணேஸ் வேலாயுதம் அவர்களது சிவன் அறக்கட்டளை நிறுவனம் வழங்கியுள்ளது.

மற்றொரு முன்னணி நிறுவனமான கிருபா லேணேர்ஸ் தனியார் நிறுவனமும் இப்பணியில் இணைந்துள்ளது. 

No comments