திருமலைக்கும் வந்து சேர்ந்தது?


வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றி வந்த கடற்படை சிப்பாய் மூலம் திருகோணமலைக்கான முதலாவது கொரோனா நோய் தொற்றாளர் வந்து சேர்ந்துள்ளார்.

திருகோணமலை பதவிசிறிபுர சிங்கள குடியேற்ற திட்டத்தை சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவர் மூலமே கொரோனா தொற்று திருமலை வந்தடைந்துள்ளது.

இரவது மாதிரிகள் அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் கிடைக்கப்பெற்ற அறிக்கை பிரகாரம் நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த கடற்படை சிப்பாய் தனது வீடு வந்திருந்த நிலையில் திருமலை நகரம்  உள்ளிட்ட பகுதிகயளில் நடமாடியதாக தெரியவந்துள்ளது. 

No comments