கடற்படை அதிகாரி மரணம்:கிளிநொச்சியில் சிப்பாய் மரணம்!


இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் மரணமாகியுள்ள நிலையில் இலங்கை அரசு மௌனம் காத்துவருகின்றது.வெலிசறை கடற்படை தளமே கூண்டுடன் கொரோனாவில் மூழ்கியுள்ள நிலையில் கடற்படை அதிகாரி மரணம் பற்றி தகவல் வெளிவந்துள்ளது.

இதனிடையே கிளிநொச்சி ஜெயபுரம் இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் தடுப்பில் இருந்த நிலையில் நேற்றைய தினம் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.இவரது மரணம் கொரோனாவாவினால் நிகழ்ந்ததாவென்ற சந்தேகத்தில்; பரிசோதனைக்காக மாதிரி அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயபுரம் இராணுவ முகாமில் பணியாற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த 28 வயதையுடைய குறித்த இராணுவச் சிப்பாய் இம் மாதம் ஆரம்பத்தில் விடுமுறையில் வீடு சென்று கடந்த 14 தினங்களிற்கு முன்பே மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இவ்வாறு பணிக்குத் திரும்பிய சிப்பாய் முகாமில் தனிமைப் படுத்தலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுக்காலை குறித்த இராணுவச் சிப்பாய் முகாமில் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை கண்டறியப்பட்டது. .

No comments