தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை கொடுங்கள்

சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (27) விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். மேலும்,

குறிப்பாக, மகசின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 74பேர் வரையிலான தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் ஆபத்துக்குள் சிக்கியுள்ளனர். இந்த சிறைச்சாலையில் உள்ள சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று குறித்த சந்தேகம் நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகள் பலர் ஒவ்வொரு சிறைக்கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பிலும் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாதுள்ளன. ஆகவே அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக எவ்விதமான உறுதிப்பாடுகளும் அற்ற நிலையிலேயே சிறைக்கூடங்களில் உள்ளார்கள்.

தற்போது ஆபத்தானதொரு அவசர நிலைமை நாட்டில் நிலவுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஆகக்குறைந்தது அவர்களுக்கு தற்காலிக பிணை அனுமதியுடன் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்காகவாவது அனுமதியளிக்க வேண்டும்.
நாடளாவிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸின் பரவலால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

No comments