கொடூர கொலையாளி சுனிலை எதிர்த்து மனு

யாழ்ப்பாணம் - மிருசுவில் எட்டுத் தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பளித்து விடுவித்தமைக்கு எதிராக, கொலையுண்டோர் குடும்பத்தார் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அளித்த மன்னிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறும் அதனை இரத்து செய்யுமாறும்  கோரியே சட்டத்தரணி கேசவன் சயந்தன் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை  இலத்திரனியல் கோவைப்படுத்தல் முறைமையூடாக தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றில் வாதங்களை முன்வைக்கவுள்ளார்.

No comments