அரிசிக்கு சிகப்படித்த வர்த்தகர்; நீதிமன்றில் மட்டியிட்டார்

மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்த வேளை கைது செய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றினால் இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் யு.எல்.அப்துல் மஜீது நீதிமன்றுக்கு தெரிவித்த குற்றச்சாட்டிற்கிணங்க விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து நீதிபதி 20 ஆயிரம் ரூபா அபராதத்தினை விதித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறு கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்படுமிடத்து வர்த்தக நிலையத்தின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமென ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் எச்சரிக்கையினையும் விடுத்தார்.

No comments