கள்ள சாராயத்துடன் மூவர் சிக்கினர்

யாழ்ப்பாணம் - உரும்பிராய் கிழக்கு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 24 லீற்றர் கசிப்பு மற்றும் அதனைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்படதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை கோப்பாய் பொலிஸ் பிரிவில் கசிப்பினை பைக்கற்களில் அடைத்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் நேற்று (24) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 6 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டிருந்து.

No comments