சட்டமா அதிபர் திணைக்களத்தை மூடிய கொரோனா!

ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இது குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, அதில் அனைத்து அதிகாரிகளுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை வளாகத்திற்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு அறிவித்துள்ளார்.

அத்தோடு திணைக்களத்தின் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அரச சட்டவாதிகளின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி மறு அறிவித்தல் வரை சட்டமா அதிபர் திணைக்களம் மூடப்பட்டுள்ளது.

No comments