பொலிஸார் முன்னிலையில் தீயிட்டு தற்கொலை செய்த இளைஞன்!

இந்தியா - கேரளா, இடுக்கி மாவட்டத்தின் மூணாறு பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளினை பொலிஸார் பறிமுதல் செய்ததால் குறித்த இளைஞர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

144 தடை உத்தரவு அமுலில் இருந்தபோது அதனை மீறி சுற்றித்திரிந்த இளைஞரை மடக்கிப்பிடித்த பொலிஸார் மோட்டார் சைக்கிளினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் காரணமாகவே குறித்த இளைஞர் பொலிஸார் கண்முன்னே தனக்குத்தானே தீமூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தீயில் எரிந்து படுகாயமடைந்த நபரை மீட்ட பொது மக்கள் சிலர் அவரை மருத்துவ மனையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

No comments