கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தல் மையம்?


வடக்கில் தெற்கிலிருந்து ஓரே இரவில் ஆயிரத்து நூறு பேரை தனிமைப்படுத்த அனுப்பிய இலங்கை மேலும் பல தனிமைப்படுத்தல் மையங்களை தேடிவருகின்றது.

ஏற்கனவே கிளிநொச்சியில் கொரோனா சிகிச்சை மையம் மேலதிக தனிமைப்படுத்தல் மையமென இலங்கை விமானப்படை இடம்பிடிப்பதில் மும்முரமாகியுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் பலாலி,மிருசுவில் மற்றும் கொடிகாமம் படைமுகாம்களில் தனிமைப்படுத்தல் மையங்களை பேணி வந்த அரசு புதிதாக வெளியே இடங்களை சுவீகரிக்க திட்டமிட்டுள்ளது.

இதன் பிரகாரம் கோப்பாயிலுள்ள கல்வியியல் கல்லூரி புதிய தனிமைப்படுத்தல் மையம் அமைக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கேதுவாக இங்கு கல்வி கற்கும் ஆசிரிய மாணவர்களது உடமைகளை அங்குள்ள விடுதிகளிலிருந்து அகற்ற அவசர உத்தரவு நிர்வாகத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் கொரோனா பரவல் கட்டுப்பாடின்றி அதிகரித்துவரும் நிலையில் தனிமைப்படுத்தலிற்குள்ளாகும் மேலும் பலர் வடக்கிற்கு அனுப்பி வைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கேதுவாக புதிய தனிமைப்படுத்தல் மையங்களை திறக்க அரசு மும்முரமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

No comments