கொரோனா - 1000 சடலப்பைகள் ?


சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் 1000 உடல்களை சர்வதேச நியதிப்படி அடக்கம் செய்வதற்கு வேண்டிய பொதிகளை தந்து உதவுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் னுச சுனில் டி அல்விஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தற்பொழுது கோரோனோ தொற்று மற்றும் இறப்பு நிலைமைகளை ஆராயும் பொழுது இலங்கைக்கு 1000 இறந்த உடல்களை அடக்கம் செய்யும் பொதிகள் தேவையாகவுள்ளது என்றும் அவற்றை தாமதமின்றி தந்துவுமாறு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

தற்பொழுது 7 பேர் மட்டுமே மரணமடைந்துள்ள நிலையில் 1000 பேருக்கான அடக்கம் செய்யும் பொதிகளை கோரும் அரசு இ எதற்காக ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியது என்பது விசித்திரமாகவுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சுகாதார அதிகாரிகள் மற்றும் வைத்திய நிபுணர்களின் எதிர்ப்புகளையும் மீறியே கோத்தபாய அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.

No comments