கொரேனாவால் பெருவில் நாட்டில் 17 காவல்துறையினர் பலி!

பெரு நாட்டில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி 17 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். இதேநேரத்தில் நாடு முழுவதும்
முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சுவாசக் கவசங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கத் தவறியதாக விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து உள்துறை அமைச்சர் உள்துறை அமைச்சர் கார்லோஸ் மோரோன் பதவி விலகினார்.

1,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்காக தனது துறை 15 மில்லியன் டாலர் (12 மில்லியன் டொலர்கள்) ஒதுக்கியுள்ளதாக புதிய உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

32 மில்லியன் பேர் வாழும் பெரு நாட்டில் இதுவரை 700 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும் 25,000 பேர் வரையில் தொற்று நோய்க்கு உள்ளாகியிருப்பாதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


No comments