தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பொருளாதாரத்தை திறக்க முடியாது - ஜஸ்டின் ட்ரூடோ

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை நாங்கள் தடுப்பதற்கும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு இருக்க வேண்டும்.
இல்லாத வரைக்கும் கனடா தனது பொருளாதாரத்தை மீண்டும் திறக்கக்கூடாது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

ஒட்டாவாவில் சனிக்கிழமையன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ட்ரூடோ இவ்வாறு கூறினார்.

கனேடியர்களைப் பாதுகாப்பதற்கும், கொவிட்-19 பரவுவதை நாங்கள் தடுப்பதை உறுதி செய்வதற்கும் போதுமான பொருள் இருக்காத வரை நாங்கள் பொருளாதாரத்தின் எந்தவொரு துறையையும் மீண்டும் திறக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

அடுத்தவாரம் கொரோனாவுக்கு எதிரான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரங்கள் வானூர்தி மூலம் வந்திறங்க உள்ளன. இதேநேரம் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்து வருகின்றன.

நாங்கள் முன்போக்கான அணுகுமுறையை எடுக்க வேண்டும். பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.

விஞ்ஞானத்தின் அடிப்படையில் மீண்டும் திறப்பதற்கான அடிப்படை சரிபார்ப்பு பட்டியலை அமைப்பதில் மத்திய அரசு தொடர்ந்து மாகாணங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், நேரம் மற்றும் சரியான நடவடிக்கைகள் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்திற்கு வித்தியாசமாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

மீண்டும் திறப்பது குறித்த அறிக்கையை வெளியிடுவது குறித்து நேற்று முன்தினம் இரவு மாகாண தலைவர்களுடன் பேசியதாக அவர் கூறியிருந்தார்.

No comments