யாழில் கடந்த மூன்று நாளில் ஏதுமில்லை!


யாழ்.குடாநாட்டில் கடந்த மூன்று நாட்களாக வெளிவந்த பரிசோதனைகள் முடிவுகளின்படி பரிசோதனைக்கு உள்ளானவர்கள் ஒருவருக்கும் கொரோனோ தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படடுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனோ தாக்கத்தின் எதிரொலியாக வடமராட்சி கிழக்கு குடத்தனை கிராமத்னுள் நுழைய ஊர் மக்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.கிராம எல்லையில் வீதி மறியல்களை உருவாக்கி கிராமத்திற்கு வெளியே அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்கள் கைகளை கழுவி சுகாதார அறிவுரைகள் வழங்கப்பட்டு மீள கிராமத்திற்கு அழைக்கப்படுகிறார்கள். அத்தோடு வெளியாட்கள் கிராமத்திற்குள் அநாவசியமாக உட்செல்வதற்கும் அனுமதியில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி இளைஞர்கள் எடுத்துள்ள முன்மாதிரியான விழிப்புணர்வு செயற்பாட்டிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து ஆதரவை வழங்கி வருகின்றார்கள்.

No comments