யாழிற்கு அள்ளி வார்த்தது சுவிஸ் மதபோதகரே!
சுவிசில் இருந்து வந்த மத போதகருடன் பழகிய மற்றொரு மத போதகரிற்கு யாழில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் மற்றொருவருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்தால் அவர் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது நோயாளியாகியுள்ளார்.
பலாலி இராணுவ தளத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
ஆகவே சுவிஸ் போதகரே காவியாக இருந்தமை உறுதியாகின்றது.பலாலியில் தனிமைப்படுத்த 17பேர் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகருடன்; நெருங்கி செயற்பட்டவர்களாவர்.
மத போதகருடன் தொடர்புடையவர்களை தனித்து வைக்குமாறு யாழ்.ஊடக அமையம் முதன் முதலில் வைத்திய அதிகாரிகளிடம் கோரியிருந்தது.
ஆயினும் அனைவரையும் சேர்த்து தனிமைப்படுத்துவது சிக்கலானதென சுகாதார அதிகாரிகள் தட்டிக்கழித்திருந்தனர்.
தற்போது மத போதகருடன் தொடர்புடையவர்கள் மூலமே யாழில் பரவல் நடைபெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.
இதனிடையே யாழ்ப்பாணம், குருணாகலை, மருதானை ஆகிய இடங்களைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளதுடன் 126 பேர் சிகிச்சைப் பெறுகின்றனர் என தெரியவந்துள்ளது.
Post a Comment