மூவருக்கு கொரோனா உறுதி

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் மூன்று பேர் இன்று (01) மாலை கண்டறியப்பட்டுள்ளனர்.

குருநாகல், மருதானை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்று காலை ஒருவர் குணமடைந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments