தணிக்கை:கோரொனே மரணம் எலிக்காய்ச்சலானதா?


கொரோனா மரணங்களை இலங்கை அரசு யுத்த கால உத்தியுடன் தணிக்கை செய்ய தொடங்கியுள்ளது.

இதன் பிரகாரம் வெலிசறை கடற்படை தளத்தில் உயிரிழந்த கடற்படை அதிகாரி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

குறித்த கடற்படை அதிகாரியினது பிரேத பரிசோதனையினை மேற்கொண்ட மருத்துவ அதிகாரி நிர்ப்பந்திக்கப்பட்டு எலிக்காய்;ச்சல் நோயாக அறிக்கை மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் அதனை மறுதலித்து இறுதி அடக்க நிகழ்வை கொரோனா மரணம் சம்பவித்தவர்களது போன்று நடத்த பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரி வலியுறுத்தியதையடுத்து இறுதி கிரியைகளை பாதுகாப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே வடக்கில் பெருமளவு படையினர் நிலைகொண்டுள்ளதை வைத்து வடக்கில் தென்னிலங்கைக்கான தனிமைப்படுத்தல் மையங்களை பேண அரசு மும்மரமாகியுள்ளது.

இதற்கென உடனடியாக மேலும் 5 பாடசாலைகள் படையினரின் பயன்பாட்டிற்கு வேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் படை தலைமை கோரியுள்ளது.

இதற்காக யாழ்ப்பாணம் றிபேர்க் கல்லூரி , கைதடி அ.த.கபாடசாலை என்பவற்றுடன் மன்னார் பேசாலை மற்றும் கிளிநொச்சி அழகாபுரி பாடசாலைகளும் முல்லைத்தீவு ஒலுமடு மகாவித்தியாலமும் படையினரால் கோரப்பட்டுள்ளது.

சாவகச்சேரி றிபேர்க் கல்லூரியும் கைதடி பாடசாலையும் விடுமுறையில் சென்ற படையினர் முகாம் திரும்பும் நிலையில் 15 நாட்கள் இடைத் தங்கல்; முகாமாக பயன் படுத்த. கோரப்பட்டுள்ளது.

இதேநேரம் பேசாலை சென்மேரிஸ் பாடசாலை கடற்படையினரால் கோரிப் பெறப்பட்டுள்ளது. இதற்காக மன்னார் மாவட்டத்தில் கடற்படையுனர் குறித்த பாடசாலையை பொறுப்பேற்றுள்ளது.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டம் அழகாபுரி அ.த.க.பாடசாலையினை விமானப்படையினர் கோரிப் பெற்றுள்ளதோடு இரணைமடு விமானப்படைத் தளத்தில் கொரோனா சந்தேக நபர்கள் தடுப்பில் இருப்பதனால் அங்குள்ள விமானப்படையினால் குறிப்பிட்டள அளவினர் இப்பாடசாலையில் தங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றே மாங்குளம் ஒலுமடுப் பாடசாலையும் படையினரால் அவசரமாக கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments