சுவிஸ் மதபோதகர் விவகாரம்:ஏனையோர் அறிக்கை இன்று?


யாழ்ப்பாணத்தில் மத போதகருடன் தொடர்புடைய மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகல் கொரோனாத் தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் இனங்காணப்பட்டிருந்தார்.அவர் சர்ச்சைக்குரிய தேவாலய மதபோதகராவார்.

இந்நிலையில், நேற்;று இரவு 11 மணியளவில் மேலும் இருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய சுவிஸ் மதபோதகரின் வாகன சாரதி,அவருக்கு சமையல் செய்து வழங்கியவரென இருவரே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாத்தொற்றுக்குள்ளாகிய நிலையில் கொழும்பு தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று பிற்பகல் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த போதகர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்று இரவு 11 மணியளவில் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த மேலும் இருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் மாத்திரம் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்வடைந்துள்ளதுள்ளது.

இதனிடையே பலாலி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் பத்து பேரினது மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அவர்களது நிலை பற்றிய அறிவிப்பு இன்று வெளிவரவுள்ளது.

இதனால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென்ற அச்சம் அனைத்து மட்டங்களிலும் எழுந்துள்ளது.

No comments