யாழிற்கு வந்த சோதனை:நீதி கோரும் முஸ்லீம்கள்?


யாழில் இருந்து வந்தவர்களுடன் தொடர்புகளை பேணிய வவுனியா பெண்
காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளமை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் யாழ்ப்பாணம் சென்று வந்த குறித்த பெண்ணுக்கு இரு வாரங்கள் தொடர் காய்ச்சல் நீடித்துள்ளது.
இந்நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களில் மரணம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நோய்வாய்ப்புற்றிருந்தமை தொடர்பில் அறிவிக்காதிருந்தமை பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமு.
இதனிடையே கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில், இன்று காலை (02) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தாம் கூடி ஆராய்ந்தோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடல் முன்னாள் அமைச்சர் பௌசியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நேற்று (01) இரவு உயிரிழந்த மருதானையைச் சேர்ந்த பீ.எச்.எம்.ஜனூஸ் (72- என்பவரது உடலை அடக்கம் செய்வது தொடர்பில், நேற்று இரவு முழுவதும் உயரதிகாரிகள் மற்றும் அரச உயர்மட்டத்துடன் பல தடவைகள் பேச்சு நடாத்தி, தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதும் சாதகமான முடிவு எட்டப்படாத நிலையிலேயே, தற்போது பிரதமரை நேரில் சந்திக்கவிருக்கிறோம் என்றார்.

No comments