காவிகள் வெளியே:ஆனாலும் அச்சம் வேண்டாம்-சத்தியமூர்த்தி!


கொரோனா தொற்று காவிகள் வெளியே இருப்பார்களாயின் அச்சம் நீங்கியதாக கருத முடியாது.அவர்கள் வெளியில் ஏனையவர்களிற்கு பரப்பும் சூழல் தொடர்வதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் யாழ்ப்பாண நிலைகள் தொடர்பிலும் பொறுத்திருந்தே பார்க்கவேண்டுமென தெரிவித்த அவர் ஊரடங்கு விலக்கு தொடர்பில் அரசே முடிவெடுக்குமென தெரிவித்தார்.

இன்று புதன் காலை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து தெரிவிக்கையில் தற்போது தற்போது புதிதாக கொரோனா தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் சர்ச்சைக்குரிய பாதிரியாருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள்.அத்துடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர்கள்.இதனால் அச்சமான சூழல் தொடர்பில் மக்கள் கவலை கொள்ள தேவையில்லையெனவும் தெரிவித்தார்.

தற்போது பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள பரிசோதனை கருவிகள் மூலம் ஒரு நாளில் 72 பேருக்கான கொரோனா தொற்று ஆய்வுகளை செய்யமுடியும்.யாழ்.போதனாவைத்தியசாலை ஆய்வுகூடத்தை இயக்குவதன் மூலம் மேலும் பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும்.

தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலமே கொரோனா தொற்றை அடையாளம் காண முடியுமென தெரிவித்தார்.

No comments