தங்காலை பிரதேசத்தில் சுற்றுலா  ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த, சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஹோட்டலில் பணியாற்றிய இருவர் நோய் அறிகுறிகளுடன் இன்று (01) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென,  தங்காலை சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் கஜதீர தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் தங்காலைக்குச் சென்றிருந்த குறித்த நபர், கடந்த 15,16,17  ஆம் திகதிகளில் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. 
கொரோனாவை ஒழிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, போலியான கருத்துக்களை வெளியிடுவது, ஆரோக்கியமற்ற காணொளிகளை பதிவேற்றம் செயயும் நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்

No comments