மேலும் இருவர் மரணம்:அரசு மௌனம்?


நீர்கொழும்பு வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் இருந்த இருவர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆயினும் மரணத்துக்கு கொரோனா நோய்தான் காரணமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்பட: வைத்தியர்களால் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இதனிடையே கொரோனோ தாக்கம் இலங்கையில் தீவிரமடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் அதன் தாக்கத்தை உணரக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் இன்று வரையான நிலவரத்தை பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, போதனா வைத்தியசாலையில் இதுவரை ஒருவர் கொரோனோ தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேவேளை, சந்தேகத்தின் பேரில் சேர்க்கப்பட்ட 39 பேர் பரிசோதனைகளின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்;கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதன் முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படுமென்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

No comments