யாழில் மேலும் எண்மருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி!

யாழ்ப்பாணம் - நாவந்துறையில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த 8 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

சுவிஸ் பாஸ்டரின் ஆராதனையில் பங்கேற்ற நாவந்துறையைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

அவர்கள் 8 பேரின் மாதிரிகளே கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைக்கு இன்று (06) பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதன்படி கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

No comments