இத்தாலியில் வீடு வீடாக உணவு வழங்கும் மாபியா குழுக்கள்! அதிர்ச்சியில் அரசாங்கம்!

கொரோனாவால் ஏற்பட்டுள்ள முடக்க நிலையில் இத்தாலியில் வறுமையில் வாழும் மக்களுக்கு மாபியா குழுக்கள் உணவுப் பொருட்களை வழங்கி
வருகின்றனர்.

இச்செயற்பாடு இத்தாலியில் பெரும் சர்ச்கையை ஏற்படுத்தியுள்ளதுடன் பேசு பொருளாகவும் எழுந்துள்ளது.

இத்தாலியின் முக்கிய நகரங்களான நேப்பிள்ஸ், பலெர்மோ, பாரி, கட்டன்சரோ ஆகிய பகுதியில் வறுமையில் வாடும் மக்கள் போதிய உணவுப்பொருட்கள் கிடைக்காமல் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இவர்களுக்கு இப்பகுதிகளில் உள்ள பத்துக்கு மேற்பட்ட பிரபல மாபியா குழுக்கள் மக்களக்கு பாஸ்ரா, தண்ணீர், பால், மா போன்ற பொருட்களை வீடு வீடாகச் சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர்.

தங்களது செல்வாக்கு அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள வர்த்த உரிமையாளர்களை மிரட்டி அவர்களையே வீடு வீடாக உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய வைத்துள்ளனர்.

பொதுவாக மாபியா குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிலையே இத்தாலியில் காணப்படுகின்றது. இதனால் இச்செயற்பாட்டால் சமூக ஆர்வலர்கள் இத்தாலிய அரசாங்கத்தைத் தொடர்ந்தும் எச்சரித்து வருகின்றனர்.

இதையடுத்து நாட்டின் உள்துறை அமைச்சர் மாபியாக்களின் இச்செயற்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments