ஜூலியன் அசாஞ்சேவுக்கு இரு குழந்தைகள்! வெளி வந்தது தகவல்!

விக்கி லீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு இரு ஆண் குழந்தைகள் இருப்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.


பிரித்தானியாவில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்திருந்தபோது ஜூலியன் அசாஞ்சே தன்னுடைய சட்டவாளர் ஸ்டெல்லா மோரிசுடன் இணைந்து குடும்பம் நடத்தியுள்ளார். அப்போது அவருக்கு இரு குழந்தைகள் பிறந்துள்ளது.

ஈக்குவடோர் தூதரகம் ஜூலியன் அசாஞ்சேவின் அரசியல் தஞ்சத்தை விலக்கியதை அடுத்து பிரித்தானியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பெல்மார்ஷ் சிறையில் தான் அடைக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது லண்டனின் பெல்மார்ஷ் சிறையில் ஒருவர் கொரோனா தொற்று நோயால் மரணமடைந்திருந்தார். அதனைக் காரணம் காட்டி ஜூலியன் அசாஞ்சேவின் விடுவிக்குமாறு அவரின் சட்டவாளர் பிரித்தானிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஸ்டெல்லா மோரீஸ் என்ற பெண் சட்டவாளர் அண்மையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அசாஞ்சேவும் தானும் 2015 ஆம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், தங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமொிக்கா மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்களை கேபிள்கள் மூலம் கிடைத்த தகவல்களை விக்கி லீக்ஸ் மூலம் உலகிற்கு அம்பலப்படுத்தினார்.

அமொிக்க இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக இதற்காக அவருக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத் தண்டணையை அவர் எதிர் நோக்கியுள்ளார்.

அடுத்தமாதம் அவரை அமொிக்காவிடம் ஒப்படைப்பதற்கான விசாரணைகளை சட்டரீதியாக எதிர்கொள்ள இருக்கும் நிலையில் அவரை விடுவிக்குமாறு அவரது மனைவி பிரித்தானிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments