உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:றிசாத் தம்பி கைது?


இலங்கையில் கடந்த ஆண்டினில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஓராமாண்டு அண்மிக்கின்ற நிலையில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகோதரர் கைதாகியுள்ளார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளுக்காகவே முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் இளைய சகோதரர் ரியாத் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஒருபுறம் கோரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த மாத இறுதியில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

விசாரணைகளின் தொடர்ச்சியாக ரியாத் பதியூதீன் கைது செய்யப்பட்டார் என்று  இன்று ஞாயிறு மாலை இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட தகலையடுத்தே கைது இடம்பெற்றதாக காவல்துறை அறிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கை அமைச்சரவையிலிருந்து குற்றச்சாட்டுக்களையடுத்து தமது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் முன்னதாக முஸ்லீம் அரசியல் தலைவர்களை முடக்க தற்போது மும்முரமாகியிருப்பதாக கூறப்படுகின்றது.

No comments