கனவு தகர்ந்தது:ஒரே நாளில் யாழில் எண்மர்?


யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று நடத்தப்பட்ட பரிசோதணையில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 பேருக்கும், முழங்காவில் கடற்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 4 பேருக்கும் குறித்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகர் மற்றும் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேர் பலாலி படைமுகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு கடந்த முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் நடத்தப்பட்ட பரிசோதணையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் குறித்த 6 பேரும் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்த ஆதார வைத்திய சலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஏனைய 14 பேரும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்கான இரண்டாம் கட்டமாக் இரத்த மாதிரிகள் கேரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

பரிசோதனையின் முடிவில் அதில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருடைய இரத்த மாதிரிகளும் இன்று பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டது. இப் பரிசோதணைகளின் முடிவில் அதில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மொத்தமாக இன்று மட்டும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆய்வுகூட பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த 6 பேர், யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உட்பட 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட 8 பேருடன் யாழ்.மாவட்டத்தில் மொத்தமாக 15 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments