பிரான்சில் முடக்க நிலை அறிவித்ததால் 60 ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம் - ஒலிவர் வெரான்

பிரான்சில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டதால் நாம் 60 ஆயிரம் பேரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறோம் என பிரான்சின் சுகாதார அமைச்சர்
ஒலிவர் வெரான் கூறியுள்ளார். பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

நாம் சரியான நேரத்தில் முடக்க நிலையை அறிவித்ததால் 60 ஆயிரம் மனித உயிர்களை நாம் காப்பாற்றியிருக்கிறோம். சிலநேரம் எண்ணிக்கை கூடுதால இருந்திருக்கலாம்.

முடக்க நிலையை அறிவித்திருக்காது விட்டிருந்தால் மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு ஒரு இலட்சம் படுகைக்கைகள் தேவைப்பட்டிருக்கும்.

எங்களிடம் 10 ஆயிரம் படுக்கைகள் இருந்தன. ஆனால், முடக்க நிலை அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி மேலும் 10 படுக்கை வசதிகளை அவரச பிரிவில் உருவாக்கியிருக்கிறோம் என்றார்.

No comments